சனி, 30 ஏப்ரல், 2016

வேப்பிலை பேஸ்ட் :-

வேப்பிலை பேஸ்ட் :-
ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் பேட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முட்டை மற்றும் வேப்பிலை :-
முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேப்பிலை தண்ணீர் :-
ஒரு கையளவு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் அலசி வந்தால், தலையில் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
வேப்பிலை பொடி :-
வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவைப்படும் போது, அதனை எடுத்து, நீர் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளிர்த்து வாருங்கள்
 

 

திங்கள், 25 ஏப்ரல், 2016

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி? - இயற்கை மருத்துவம்

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி? - இயற்கை மருத்துவம்
மிகுந்த மருத்துவ குணமிக்கது வேப்பிலை. வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும். குறிப்பாக தற்போது பலரும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்பதால், வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்றும் பார்ப்போம்.
பொடுகைப் போக்கும் :-
பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.
பட்டுப் போன்ற முடி :-
உங்கள் முடி பொலிவிழந்து உள்ளதா? அப்படியெனில் அதனை வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.
முடி வளர்ச்சி :-
வேப்பிலை முடியின் வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும்.
ஸ்கால்ப் நோய்த்தொற்று :-
ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அதனை வேப்பிலையைக் கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
அரிக்கும் தலை :-
உங்களுக்கு தலையில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.
வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் :-
2
டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வேப்பிலை எண்ணெயை சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச, பொடுகுத் தொல்லை, அரிக்கும் உச்சந்தலை போன்றவை அடங்கும்

Symphony Silver-i PURE 9-Liters Air Cooler with Remote Control (White)

Portable speaker just launched

தாவரத் தங்கம் - காரட்

 

தாவரத் தங்கம் - காரட்
தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?
தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.
அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.
இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா? இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.
காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.
சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்.
காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது... ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி,

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
1)
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
2)
செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
3)
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
4)
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.
5)
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
6)
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
7)
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
8)
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்..