வெள்ளி, 20 மே, 2016

ஆயுள் முழுவதும் பற்களை பாதுகாப்பாக வைக்க இலகுவான டிப்ஸ்கள்

ஆயுள் முழுவதும் பற்களை பாதுகாப்பாக வைக்க இலகுவான டிப்ஸ்கள்
1. நமது முகத்துக்கு அழகையும் சிரிப்புக்கு ஒளியையும் ஊட்டுபவை பற்களே! அவற்றை பாதுகாப்பது அவசியமாகும்.
2. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். ஆலம் விழுதுயும், கருவேலங் குச்சியையும், வேப்பங்குச்சியையும் நசுக்கி மிருதுவான ப்ரஷ் போல் செய்துகொண்டு பல் துலக்குவது நல்லது.
3. மா, கொய்யா, கரிசாலை, துளசி, வேப்பிலை, புதினா, அரிகம்புல் முதலிய இலைகளைக் காய வைத்து கிராம்பு சேர்த்துப் பொடிசெய்து வைத்துக் கொண்டு பல் துலக்கலாம்.
4. மிருதுவான ப்ரஷ் மூலம் ஈறுகளைக் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதால் ஈறுகளில் புகுந்துள்ள உணவின் துணுக்குகள் அகன்று விடும்.
5. பற்களைக் காக்கும் நற்பழக்கங்கள்: உணவு சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் 4 முறையாவது வாய் கொப்பளிப்பது நல்லது.
6. பல் குழிகள் மற்றும் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட உணவுத் துணுக்குகள் அகற்ற தென்னை குச்சி, ஊசி, பின் பொன்றவற்றை பயன்படுத்த கூடாது.
7. பல் குழியில் உள்ள உணவை அகற்ற தண்ணீரைக் கொண்டு பல முறை வாயைக் கொப்பளித்தால் போதும் துணுக்கு அகன்று விடும். பல் சுத்தம் செய்யும் சிரஞ்ஜியால் நீரைப் பீய்ச்சி அடித்தும் துணுக்குகளை அகற்றலாம்.
8. பல் கூச்சம்: நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் 10மி.லி (2 டீஸ்பூன்) நல்லெண்ணெய்யை வாயிலிட்டு அது மோர் போல் (ஆயில் பல்லிங்) ஆகும்வரை கொப்பளித்து, பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
9. பற் குழிகள்: பற்களில் குழிகள் ஏற்பட்டால் குணப்படுத்த இயலாது. ஆனால் பற்குழி பெரிதாகாமல் தடுக்கலாம். தினந்தோறும் ஒரு நெல்லிக்காயைக் காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிடலாம். மருத்துவரை அணுகி பல் சிமெண்ட் மூலம் அடைத்து விடலாம்.
10. ஆடும் ப்ல்லை எடுக்க: படிகாரத்தை நுணுக்கி, பொடி செய்து தேனில் கலந்து கொண்டு ஆடும் பல்லின் ஈறுகளில் தேய்த்தால் அப்பகுதியில் மரத்து போகும். பின்பு பல்லை விரல்களால் பிடுங்கி விடலாம். இதற்கு சில நாட்கள் தொடர்ந்து முயல வேண்டியிருக்கும்.
பற்கள் பல நோய்கள் மற்றும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. அடிக்கடி வயிற்றை சுத்தம் செய்து மலத் தேக்கத்தை நீக்கி ஒரு நாள் உபவாசம் இருஃதால் பல்வலி நீங்கி விடும்

கருத்துகள் இல்லை: