சனி, 14 மே, 2016

வயிற்றுப் புண் நீங்க!!!

வயிற்றுப் புண் நீங்க!!!
வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்கள் நீங்க பாட்டி வைத்தியம்:-
வயிற்றுப் புண்:-
ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.
சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள்:-
பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.
வயிற்றுப் புண் மற்றும் கிருமிகள் தீர
1.வயிற்றுக் கிருமிகள்,புண் நீங்க:-சுண்டை வற்றலை அடிக்கடி உணவில் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வயிற்றில் உள்ள கிருமி,புண்,வலி முதலியன தீரும்.
2.குடல்கிருமி,புண் தீர:-மாங்கொட்டைப் பருப்பைக் காயவைத்து இடித்துத் தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை தேனில் குழைத்து உண்டு வர குடலில் உள்ள கிருமி,வயிற்றுப் புண் நீங்கும்.
3.மலப் புழுக்கள் வெள்யேற:-பிரம்மத் தண்டு வேரைப் பொடி செய்து இரவில் மட்டும் வெந்நீரில் கலந்து குடித்துவர மலத்தில் வருகிற புழுத் தொல்லைகள் தீரும்.
4.வயிற்றுப் புண்,கிருமிகள் தீர:-மாதுளம் பழத் தோட்டைப் பொடி செய்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் வெந்நீரல் கலந்து குடிக்க வயிற்றுப் புண்,கீருமிகள் முதலியன தீரும்.
5.குடல் புழுக்கள்,வயிற்று வலி,வயிற்றுப் புண்,மூலம் தீர:-மாதுளம் பழம் அடிக்கடிச் சாப்பிட்டு வரத் தீரும்.
6.வயிற்றுப் பூச்சிகள் தீர:-சிறிதளவு பப்பாளிப் பாலை விளக்கெண்ணையடன் கலந்து இரவில் குடித்து வர சில தினங்களுக்குள் வயிற்றுப் பூச்சிகள் தீரும்.
7.வயிற்றில் உள்ள கிருமி வயிற்று வலி தீர:-தினசரி அன்னாசிப் பழம் சாப்பிட்டு வர சில தினத்தில் வயிற்றுக் கிருமி தீரும்.
8.வயிற்று வலி,வயிற்றுக் கிருமி நீங்க:-இலவங்கப் பட்டையை வாரத்திற்கு இரு முறை உணவுடன் சேர்த்து உண்டு வர வயிற்று வலி,கிருமி தீரும்.
9.வயிற்றுப் பூச்சிகள்,வயிற்று வலி நீங்க:-பாகற் காயின் விதையை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்து வர வயிற்றுப் பூச்சிகள்,வயிற்று வலி தீரும்.
10.வயிற்றில் உள்ள நாக்குப் ப+ச்சிகள் தீர:-குப்பைமேனி வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துக் குடித்து வர வயிற்றுக் கிருமிகள் தீரும்.
11.குடல் கிருமிகள் வெளியேற:-வரிக் கும்மட்டிக் காய்ச் சாற்றுடன் கருஞ் சீரகத்தைச் சேர்த்து அரைத்து விலாவில் இருபுறமும் பூசிவர வயிற்றுக் கிருமிகள் வெளியேறும். தொடரும்!
வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல்
வயிற்றுக்கோளாறுகளுக்கு
நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு
மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக
பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல் குணமாக – சுரக்கொன்னை மர பூவை தேனில்
ஊற வைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
குடல் வலிமை பெற – வில்வமர பூக்களை புளி
சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்
கடுப்பு குணமாகும்.
சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது நிற்கும்.
குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு
வைத்தால் பொருமல் வலி குணமாகும்.
வயிற்று வலிக்கு – கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி
செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது நிற்கும்.
வயிற்றுப் பூச்சி ஒழிய – பாகற்காய் விதையை
அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.
பேதி குணமாக – மாங்கொட்டையை பருப்பு பொடி செய்து
பசும்பாலுடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
அஜீரணம் சரியாக – ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை. இஞ்சி, சீரகம்
இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்கநிவர்த்தியாகும்.
வாயு தொல்லை நீங்க – வெள்ளைப்பூண்டு பசும்பாலில்
வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.
வாயு நீங்கி நல்ல பசி எடுக்க – விளாம்பழத்தின்
கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
வயிற்று நோய் குணமாக – சீரகத்தை வறுத்து
பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
குடல் புழுக்கள் – தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.
வயிற்று வலி தீர – ஆமணக்கு துளிரை
விளக்கெண்ணையில் வதக்கி
தொப்புளில் வைத்து கட்ட சூடால் வரும் வயிற்று வலி தீரும்.
வயிற்று போக்கு தீர – நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில்
கலந்து சாப்பிட்டு வர மோகம், வயிற்றுப் போக்கு தீரும்.
வயிற்று பூச்சிகள் ஒழிய – வேப்பிலையை நன்றாக
அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள்
தொந்தரவு தீரும்.
குடல் புண் குணமாக – மணத்தக்காளி கீரை
சாப்பிட்டால் குடல் புண்
குணமாகும்.
வயிற்றுவலி குணமாக – குறிஞ்சி கீரையை சாப்பிட்டு
வர தீரும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று புண், வாயு, பசியின்மை, மாதருக்கு
உதிரப்போக்கு சரியாக – நாய்வேளை இலையை சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர சரியாகும்.
வயிற்று வலி, வயிற்று
பொருமல். அஜீரணம் குணமாக – ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று பொருமல். அஜீரணம்
குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் வெளியேற – எருக்கம் இலைச்சாறு 3 துளியை 10 துளி தேனில் கலந்து
கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். ( குழந்தைகள்ளுக்கு கூடாது ).
வயிறு பெருத்து உடல் சிறியதாக இருக்கும் குழந்தைகளுக்கு – கோரைகிழங்கை
தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.
வயிற்றுப் பூச்சிகள் வராமல் தடுக்க – அன்னாசிப்பழம்
தினமும் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
பேதி நிற்க – அவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
தொடர் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள்
பப்பாளிப்பழம் சாப்பிட
குணமாகும்.
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண்ஆறும்.
உஷ்ணபேதி குணமாக – உலர்ந்த
மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
கழிச்சல் குணமாக – மாங்கொட்டை
பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
குடல் புழுக்கள் அழிய – மாதுளம்பழம் பழம்
படுக்கைக்கு செல்லும்
முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச
இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
குடல் புண் குணமாகவும், வயிற்றுப்
புழுக்கள் அழியவும் – அகத்திக் கீரை நல்ல உணவு.
குடல் புண் தீர – முட்டைகோஸை நறுக்கி சிறிதளவு உப்பு
சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.
பித்தத்தை குறைக்க – விளாம்பழம் கிடைக்கும்
காலங்களில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
பேதி நீங்க – ஜாதிக்காயை தண்ணீர்
விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுபோட பேதி நிற்கும்.
வயிற்று பூச்சி அழிய – பாகற்காய்
கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும்.
வயிற்று வலி தீர – இரவில் கண்விழித்து
நெடுநேரம் வேலை செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட 8நாட்களில் வயிற்று
வலி தீரும்.
வயிற்றுக் கோளாறுகள் நீங்க – முள்ளங்கி
கிழங்கு சமைத்து உண்டு
வர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
மகோதரம் தீர – கரிசலாங்கண்ணி
கீரையை சமைத்து உண்டு வர மகோதரம் தீரும்.
ஜீரண மண்டலம் சீர்பட – இரவு சாப்பாட்டை 7 மணிக்குள்ளாகமுடித்துவிட்டால்
ஜீரண மண்டலம் சீர்படும். பசியிருப்பின் பழச்சாறுகள் மட்டும் அருந்தலாம்

கருத்துகள் இல்லை: