சனி, 14 மே, 2016

பசி:

பசி:
பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும்.
பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு,... போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும். அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும்.
நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.
2. உணவின் அளவு:
நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது நாம் உண்ணும் உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு (திகட்டுதல்) வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாக மென்று சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் உண்ணும்போதே 10 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது, நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும்.
இவற்றை முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு (வினீத்) சில மாதங்களில் 20 கிலோ (From 93 to 73) வரை எடை குறைந்து விட்டது.
3. உணவை உண்ணும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும்.
உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை (Hot or Cold) நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம் தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. (வெப்பமாக சென்றால் இரைப்பையை பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்)
சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி.
குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கருத்துகள் இல்லை: